59 இல் நிரந்தர நியமனமும், ஓய்வூதியமும் வழங்கி சாதித்துக்காட்டிய ஹாபிஸ்.


விநாயகமூர்த்தி பேபிராணி என்னும் பெண் மிக நீண்டகாலமாக கிழக்குமாகான சபையின் அதிகாரத்துக்குட்பட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் தற்காலிகமாக கடமையாற்றி வந்தார்.
அவருக்கு 45 வயதை தாண்டியதன் காரணமாக நிரந்தர நியமனம் வழங்க முடியாதென்று அதிகாரிகள் அனைவரும் கைவிரித்தனர். எந்தவொரு அரசியல்வாதிகளும் இவருக்கு உதவுவதற்கு முன்வரவில்லை. இருந்தும் வேறுவழியின்றி தற்காலிக ஊழியராக கடமையாற்றி காலத்தை கடந்தார்.
இந்தநிலையில்தான் கிழக்குமாகான முதலமைச்சராக இருந்தபோது அல்-ஹாபில் நசீர் அஹமத் அவர்கள் இந்த பெண்ணின் நண்மைகருதி தத்துணிவுடன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக 59 வயதில் நிரந்தர நியமனம் வழங்கி அத்தோடு ஓய்வூதியமும் வழங்கினார்.
அதுமட்டுமல்லாது தற்காலிகமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிந்த பலர் தங்களுக்கு இனிமேல் நிரந்தர நியமனம் என்பது சாத்தியமல்ல என்று நம்பிக்கையிழந்திருந்த நேரத்தில் கிழக்கு மாகாணத்தின் முழுப்பிரதேசத்திலும் உள்ள பலருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
“சாதிக்கக்கூடியதை சாத்தியமாக்குவது மட்டும் அரசியலல்ல. சாதிக்க முடியாததை சாதித்து காட்டுவதுதான் அரசியல்” என்ற வரைவிலக்கணத்தை ஏற்படுத்தியவர் முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் இலக்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற கட்சியின் பிரதி தலைவர் அல்-ஹாபில் நசீர் அஹமத் என்பது அவரது செயல்பாட்டின்மூலம் புலனாகின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -