2020 பொதுத்தேர்தல் தமிழ்பேசும் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும்.-கலாநிதி வி.ஜனகன்..!


2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலானது தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக அமையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ கணேசனுடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன்
தெரிவித்துள்ளார்.
கொழும்பு 15, அலுத்மாவத்தையில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த தேர்தலின் ஊடாக எங்களுக்கான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யாத பட்சத்தில், அடுத்து அமையப் போகும் பாராளுமன்றம் மிகவும் கடுமையாக
இருக்கும் என்பதுடன், அதற்கான அறிகுறி இன்றே தென்பட ஆரம்பித்துவிட்டதாகவும் கலாநிதி வி.ஜனகன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிடுகையில்...

இந்த பாராளுமன்றத் தேர்தலானது மிகத்தீர்க்கமானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே தமிழ் மக்கள் மிக நன்றாக சிந்தித்து தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வது அவசியம்.
கொரோனா தொற்று பிரச்சினை முதற்கொண்டு அதற்கு பின்னரான உதவித்திட்டங்கள் வரை அனைத்து விடயங்களிலும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதேவேளை வெளியுலகம் அறியாத அளவிற்கு கொழும்பில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்நிலை மாறவேண்டும்.
எனவே எங்களின் பிரதிநிதித்துவதத்தை பாராளுமன்றத்தில் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இந்த காலகட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
அத்துடன், தமிழ் பேசும் மக்களுக்கு முன்னின்று உதவி செய்யககூடியவர்களை கண்டறிந்து , அவர்களை பாராளுமன்றத்திற்கு நாம் அனுப்ப வேண்டும்.

அந்தந்த பிரதேசங்களின் தேவைகளை அறிந்து கொண்டு மக்களோடு மக்களாக வந்து நின்று களப்பணிகளில் ஈடுபடுபவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலமே எமது மக்களின் அத்தியாவசிய தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இந்த நிலையில் தேர்தல் காலத்தையொட்டி பல வேட்பாளர்கள் பறந்து வருவார்கள், நடந்து வருவார்கள், ஊர்ந்து வருவார்கள்.
உங்களின் பிரச்சினைகள் பற்றி கேள்விகளை கேட்பார்கள். அதற்கான தீர்வுகளை வழங்குவதாக கூறி உங்களின் வாக்குகளை அவர்களுக்கு அளிக்குமாறு கோருவார்கள்.
சிலநேரங்களில் இந்தியாவில் இடம்பெற்று வருவது போன்று இங்குள்ள அரசியல்வாதிகளும் பண பட்டுவாடா செய்ய முயற்சிக்கிறார்கள்.
தற்போதைய அரசாங்கமே இந்த முறையிலேயே மக்களின் வாக்குகளை சுவீகரிக்க முனைகின்றது.  கொரோனா நிவாரண
நிதியான 5000 ரூபாவை வைத்துக்கொண்டும் அரசியல் செய்கிறார்கள். எது எவ்வாறு இருப்பினும் நாங்கள்
நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
எனவே, இம்முறை எமது மக்கள் சிறப்பாக சிந்தித்து செயற்படுவார்கள் என்று நான் சென்ற இடங்களில் சந்தித்த மக்களை வைத்து புரிந்து கொண்டேன்.

மற்றைய அரசியல் கட்சிகளை பார்க்கிலும் நாங்கள் சென்ற இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. மக்கள் எங்களை கண்டதும் தொலைபேசி சின்னம் என்பதை அறிந்து
கொள்கிறார்கள். எனவே மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். அதேநேரம் மாடி வீடுகளில் இருக்கின்ற மக்களை விட இந்த கொழும்பு தோட்ட பகுதி குடியிருப்புகளில் வசிக்கின்ற மக்கள் இம்முறை மிகத்தெளிவாக இருக்கிறார்கள். சஜித் பிரேமதாச அவர்களுக்குத்தான் வாக்களிப்போம் என்று உறுதியாக இருக்கின்றார்கள்.

அவரைத் தெரிவு செய்யும் பட்சத்தில்தான் நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும் என்ற நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.
அதேவேளை, மீண்டும் மனோ கணேசன் எங்களுக்கு வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் பேசும் மக்கள் உள்ளார்கள்.
தலைவர் மனோ கணேசனுக்கும், ஜனகனுக்குமான வாக்கு நிச்சயம் என்பதை அந்த மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நமக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது". என்றும் கலாநிதி வீ.ஜனகன் கொழும்பு 15, அலுத்மாவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -