முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட 14 பேரிடம் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தவுள்ளது.
இதற்கான நோட்டீஸ் குறித்த 14 பேருக்கும் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்களான ஹேமசிறி பெர்ணான்டோ, கப்பில வைத்தியரத்ன, கருணாசேன ஹெட்டியாராச்சி, தேசிய புலனாய்வுப்பிரிவு பிரதானி சிசிர டென்டிஸ் உள்ளிட்டவர்களும் இந்த 14 பேரில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியான கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிடம் ஆணைக்குழு இன்று விசாரணை நடத்தியுள்ளது.