திராய்க்கேணி 14வயதுதமிழ்மாணவி கடத்தப்பட்டாரா?காணாமல்போனாரா?

காரைதீவு  சகா-

ம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனைப்பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி தமிழ்க்கிராமத்தைச் சேர்ந்த 14வயது மாணவியொருவர் சனியன்று இரவு காணமல்போயுள்ளார். இவர் காணாமல்போனாரா? கடத்தப்பட்டாரா? என்பது தெரியாமல் அவரது பாட்டி முறையிட்டுள்ளார்.

அவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் கல்முனை சிறுவர் நன்னடத்தை அதிகாரி கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றில் முறைப்பாடு செய்துள்ளார்.

திராய்க்கேணியைச்சேர்ந்த மாமாங்கம் நாகம்மா என்பவரே இம்முறைப்பாட்டை தெரிவித்துள்ளார். மாணவிக்கு தாய் தந்தை இல்லாதகாரணத்தினால் பாட்டிதான் அவரை வளர்த்துவந்தார்.
தனது பேத்தியான சிவபாலன் யசுதா(வயது14) திராய்க்கேணி அ.த.க.பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்றுவருபவர் என்றும் கடந்த 11ஆம் திகதி இரவு 10மணியளவில் காணாமல்போயுள்ளார் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் முறையிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிசில் 12ஆம் திகதி 12மணியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமசேவை உத்தியோகத்தருக்கும் முறையிடப்பட்டுள்ளது. இதுவரை எதுவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
மூன்று நாட்களாகியும் எதுவித தகவலும் கிடைக்கப்பெறவில்லையாதலால் அவர்(பாட்டி) இன்று(14)செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் சென்று நிலைமையை அழுதழுது கூறியுள்ளார்.

அவர் பாட்டியை ஏற்றிக்கொண்டு முதலில் கிராமசேவையாளருடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலகதிற்குச் சென்றார். பின்னர்அக்கரைப்பற்றுப்பொலிஸ் நிலையத்திற்குச்சென்று விசாரித்தபோது எதுவித நடவடிக்கையையும் அதுவரை எடுக்கப்படாதமை தெரியவந்தது. மேலும் முறைப்பாட்டிற்கான பிரதியும் பாட்டிக்குவழங்கப்படவில்லை.

இதனை தவிசாளர் நிலையபொறுப்பதிகாரியிடம் எடுத்துக்கூறியதும் முறைப்பாட்டுப்பிரதி வழங்கப்பட்டது. அதனையடுத்து கல்முனைப்பிராந்திய மனிதஉரிமைகள் ஆணைக்குழுக்காரியாலயத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

இ.ம.உ.ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இசதீன் லத்தீப் முறைப்பாட்டைப்பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக முறைப்பாட்டுப்பிரதியை உடனடியாக வழங்கினார்.

தவிசாளருடன் பெண்செயற்பாட்டாளர் பிரதேசசபைஉறுப்பினரும் தேர்தல் வேட்பாளருமான திருமதி சின்னையா ஜெயராணி மனிஉரிமை செற்பாட்டாளர்களான கே.மதனன் என்..பிரியராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.இறுதியாக குழுவினர் திராய்க்கேணிக்குச் சென்று மாணவியின் வீட்டில் பரிதவிக்கும் குடும்பத்தினரைச்சந்தித்து ஆறுதல்கூறினர்.

3தினங்களாகியும் இதுவரை மாணவி கிடைக்கப்பெறாமையினால் திராய்க்கேணியில் ஒருவித அச்சமும் பீதியும் குடிகொண்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -