லிந்துல அக்கரகந்த தோட்டத்தில் திடீர் தீ 10 வீடுகள் எரிந்து நாசம்.09 குடும்பங்கள் பாதிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்-
லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான லிந்துல அக்கரகந்தை தோட்டத்தில் உள்ள 05 ம் இலக்க தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அந்த குடியிருப்பில் உள்ள 10 வீடுகள் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சம்பவம் இன்று (28) திகதி காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீயினை பிரதேச வாசிகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் தொழிலாளர்களின் அத்தியாவசிய ஆவணங்கள்,உடுதுணிகள்,தங்க நகைகள்,உட்பட அனைத்தும் சேதமடைந்துள்ளதாகப் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாகப் பாதிப்புக்குள்ளான 09 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அப்பகுதியில் உள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சமைத்த உணவினை வழங்குவதற்கான நடவடிக்கையினை தோட்ட நிர்வாகம் மற்றும் கிராம சேவகர் இணைந்து செயப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கினறனர்.
குறித்த தீ விபத்து காரணமாக ஏற்பட்டு சேதவிபரங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -