இலங்கை மின்சார சபையால் மின் பாவனையாளர்களுக்கு இம்மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின் பட்டியலில் அதி கூடிய தொகையிட்டு வழங்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இலங்கை மின்சார சபையின் வாழைச்சேனை கிளையின் மின் பாவனையாளர்களுக்கே இவ்வாறு கூடுதல் தொகை இட்டு பணத்தை செலுத்துமாறு மின் பட்டியல் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் நிலுவைகளின்றி தொடராக பணத்தை செலுத்தி வந்த போதும் இம்மாதம் (ஜுன்) வழங்கப்பட்டுள்ள மின் பட்டியலில் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான தெளிவுகளைப் பெற்றுக் கொள்ள, மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனையை நோக்கி மின் பாவனையாளர்கள் படையெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
