கிண்ணியா பிரதேசத்தில் மலட்டு மாமரத்தில் குலை குலையாக 12 ரக மாங்காய்கள்..!

எம்.ஏ.முகமட்-

கிண்ணியா காக்காமுனை பகுதியில் கனி தராத மலட்டு மாமரத்தில் குலை குலையாக மாங்காய்கள் காய்த்திருக்கின்றன.

அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் என்பவர் மிகவும் சுவாரஸ்யமாக மரநடுகையில் அதீத ஈடுபாடும் காட்டுபவர்.

இவருடைய தோட்டத்தில் பற்பல அரிதான மரங்கள் காணப்பட்டாலும் ஒரே மரத்தில் ஒரு தோட்டமே காணப்படுவதானது பார்ப்போரை அதிசயிக்க வைக்கிறது. கனிதராத மலட்டு மாமரத்தில் 12 ரக வித்தியாசமான மாவினங்களை ஒட்டுற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார்.

அதில் அளவிலும் நிறத்திலும் பச்சை இன திராட்சையை ஒத்த வடிவில் குலைகுலையாக தொங்கும் அபூர்வ ரக மாங்கனிகளும் உள்ளன.

தற்கால விவசாயிகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இந்த சாதனை திகழ்வதோடு, ஏனையோருக்கு தூண்டுதலாகவும் அமையும் எனலாம்.

இன்று அவருடைய வீட்டு தோட்டததிற்கு சென்று இவ் வதிசய மாங்காயை நீங்களும் பார்த்து இரசிக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -