பொலிஸாருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

லங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக் கிளையான ஐக்கிய நாடுகள் சங்கம் கொரோனா நோய் காலத்தில் பாதுகாப்புக் கடமையில் இருக்கும் பொலிஸாருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அங்கிகளும், முகக் கவசங்கள் மற்றும் நோய் நீக்குவதற்கான கிருமி அழிப்பு மருந்துகளை விசிறும் பம்கள் உள்ளிட்ட பல பொருட்களை வழங்கி வருகின்றது.

இன்று (05) வெள்ளம்மிபட்டி, கொட்டாஞ்சேனை, புதுக்கடை, கெசல்வத்தை, மருதானை, மாளிகாவத்தை, கிரேண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு உஸ்னம் அளவிடும் தேமா மீற்றர், டூஇன் வன் கிருமி அழிப்பு பம்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம்.றுஸானுடீன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டபோது வெள்ளம்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி ஓ.ஏ.யு. ஜெயசாந்த,  வாழைத்தோட்ட பிரதான பொலிஸ் பரிசோதகரும், பொலிஸ் பொறுப்பதிகாரியுமான டபிள்யு.டி.பி. சேனாரத்ன ஆகியோர் குறித்த பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். 

இதன்போது கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ஐ.எம்.இக்பால் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -