சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விசேட அதிரடிப்படை முகாம் ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு


பாறுக்ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ்-சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று (05) முகாம் பொறுப்பதிகாரி எம்.எச்.ஏ.மதுரங்க தலைமையில் முகாமை அண்டிய பகுதிகளில் நடைபெற்றது.

இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக 'பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதுகாப்போம்' என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்போது கோவில்கள், வடிகான்கள், வீதியோரங்கள் போன்ற இடங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகளை அதிரடிப்படை வீரர்கள் அகற்றி சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -