நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு.



பைஷல் இஸ்மாயில் -
கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கெதிராக, மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அவர்களின் தேகாரோக்கிய தன்மையயை மேம்படுத்தும் நடவடிக்கையை கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மருந்துப் பொதிகளை மக்களின் காலடிக்குச் சென்று வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், சாகாமம், அலிக்கம்ப, கூழாவடி போன்ற கிராமங்களில் வசித்து வருகின்ற மிகவறிய குடும்பங்களின் நிலைமையை கருத்திற் கொண்டு அவர்கள் வாழும் வீடுகளுக்குச் சென்று நோய் எதிப்புப் சக்தி மருந்துப் பொதிகளை இன்றைய தினம் (09) வழங்கி வைத்தனர்.

கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.ஏ.நபீல் தலைமையில் இந்த நடவடிக்கைகள் யாவும் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், இரானுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் போன்றவற்றில் கடமையாற்றுகின்ற உத்தியோகதர்களுக்கும் இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்து பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசுக்கெதிரான மருந்து இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொதுவாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து வகைகளை அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பிரபல்லியப்படுத்தி வருவதுடன் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கடந்த மாதங்களாக முன்னெடுத்து வருகின்றமையும் விஷேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -