வேவண்டன் தோட்டத்தில் தீ விபத்து படங்களுடன்


தலவாக்கலை பி.கேதீஸ்-
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை தவலந்தண்ண வேவண்டன் தோட்டத்தில் தொழிற்சாலை பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் மின் ஒழுக்கின் காரணமாக 1.6.2020 திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. தீ பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து பிரதேச மக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து தொடர்பில் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் தீ அணைப்பவர்களுடன் இணைந்து செயற்பட்டதுடன், பாதிக்கபட்டவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர். மேலும் அங்கு தேவையான மருத்துவ உதவிகளையும் பெற்று கொடுத்தனர். சேத மதிப்பீடுகளை மேற்கொள்ள மனித வள அபிவிருத்தி நிதியத்தின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இத் தீ விபத்து தொடர்பாக இலங்கை மின்சார சபை பொறியியலாளருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத் தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -