சஜித் பிரேதாஸவின் தந்தை ரணசிங்க பிரேமதாஸவே புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார்- பிரதமர் மகிந்த

ஜே.எப்.காமிலா பேகம்-

ருணா அம்மான் உள்ளிட்ட விடுதலைப் புலிகளுக்கு சஜித் பிரேதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸவே ஆயுதம் வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமக்கு யார் ஆயுதம் வழங்கியது என்பதை கருணா கூறவில்லை.இந்த விடயம் குறித்து கதைக்கும் யார் ஆயூதம் கொடுத்தது என்பது குறித்தும் கதைக்க வேண்டும்.கருணா உள்ளிட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதாக? சஜித் பிரேமதாஸின் தந்தையான பிரேமதாஸவே ஆயுதங்களை வழங்கினார். யாரைக் கொல்வதற்கு ஆயுதம் கொடுத்தார்.சிங்கள் மக்களையும், சிங்கள இராணுவத்தினரையும் கொலை செய்வதற்காகவே ஆயுதம் கொடுத்தார்.

சிங்கள இராணுவத்தினரை கொலை செய்யவே ஆயுதங்களை வழங்கினார்.இவ்வாறு ஆயுதம் கொடுத்து உதவிய நபரின் புதல்வரே தற்போது கருணா அம்மான் கருணா அம்மான் என்று கூச்சலிடுகின்றார்.

கருணா அம்மானின் வரலாறு குறித்து நான் கதைக்கப் போவதில்லை.அது உங்களுக்குத் தெரியும். அதனுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரையும் உங்களுக்குத் தெரியும். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதும் தெரியும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -