தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் 28 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வையொட்டி நானுஓயா ரதெல்ல தோட்ட அதிகாரி டில்ரோய் மனோகர் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ச்சியாக அக்கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் அத்தோட்டத்தில் 24 வருடங்கள் சேவையாற்றிய தொழிலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அத்தோட்டத்திலுள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் மதிய நேர உணவு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வானது ஹேலிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை அவர்களின் ஆலோசனைக்கமையவே இடம்பெற்று வருகின்றன. தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனியானது கடந்த 28 வருடங்களாக பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் ஊழியர்களின் அயராத உழைப்பின் காரணமாக கடந்த வருடங்களில் இலங்கையிலுள்ள பெருந்தோட்டக் கம்பனிகளில் முதன்மை வகிக்கின்றது. தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனி மக்களின் ஒத்துழைப்புடன் அரச, மற்றும் அரசசார்பற்ற பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.