கந்தளாய் சேருவில பகுதியில் விபத்து சதாத் என்பவர் ஸ்தலத்தில் மரணம். மஹாத் என்பவர் வைத்தியசாலையில்.


திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் சேருவில பகுதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (01) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த டி எல் சதாத் 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவரே பலியானதோடு மற்றொருவர் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.மாஹாத் வயது (40) என்பவர் பலத்த காயங்களுடன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

கந்தளாய் சீனியாலை பகுதிக்குச் சென்று மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்குச் சென்ற வேளை கந்தளாயில் இருந்து வான்எல பகுதிக்கு மது போதையில் வெள்ளை கார் ஒன்றில் நான்கு இளைஞர்கள் சென்றுள்ளதாகவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சென்று மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரின் சாரதியை கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -