சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தை பாதுகாக்க உடன் நடவடிக்கை..!

ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல் தீவு களப்பு பிரதேசம் சுற்றாடல் ரீதியாக பல பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக மாவட்ட அரசாங்க அதிபரிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதனை தொடர்ந்து முதல் கட்டமாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன கடந்த வாரம் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாலொன்றை ஏற்பாடு செய்தார்.

இக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் சகிதம் களப்பு பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்ட விரோத நிர்மாணிப்புக்கள் மற்றும் மண்நிரப்பல் போன்ற செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் நோக்கில் நேற்று (22) குறித்த பிரதேசத்துக்கு கள விஜயமொன்றை அரசாங்க அதிபர் மேற்கொண்டார்.

இக்களப்பு பிரதேசம் அதி உணர்திறன் கொண்டதும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த பகுதியாக உள்ளது. ஆனால் சில நபர்களால் இக் களப்புக்கு சுற்றாடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்ட விரோத நிர்மாணங்கள் மற்றும் மண்நிரப்பல் செயற்பாடும் இடம்பெறுகின்றது.

இவற்றை சீராக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது சில தடைகள் ஏற்பலாம்.எவ்வாறாயினும் அவற்றையெல்லாம் முறியடித்து இக்களப்பை பாதுகாக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் .அத்துடன் இக்களப்பினை அதி உணர்திறன் மிக்க சுற்றாடல் வலயமாக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கரையோரம் பேணல் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குறிய அடையாளம் காணப்பட்ட களப்பிற்குறிய பிரதேங்களை வர்த்தமானிப்படுத்தி பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மாவட்ட காணி பயன்பாட்டு குழுவில் சுற்றாடல்சார் விடயங்களை விரிவாக கலந்துரையாடுவதுடன் சாம்பல் தீவு உட்பட மாவட்டத்தில் உள்ள ஏனைய களப்புக்கள் மற்றும் சுற்றாடல் கட்டமைப்புக்களை பாதுகாக்க ஈர நில பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட்டு செயற்படவுள்ளதாகவும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் .

திருகோணமலை மாவட்டத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வரக்காரணம் இங்குள்ள இயற்கை எழில் மிக்க சுற்றாடல்சார் பிரதேசங்களாகும்.எனவே இவற்றை அழிக்கும்போது சுற்றுலாக்கைத்தொழில் பாதிக்கப்படும்.எனவேதான் முதல் கட்டமாக இக் களப்பினை பாதுகாக்க சகல திணைக்களங்களும் இன்று ஒன்றிணைந்துள்ளது. கடந்த காலங்களில் நிறுவனங்களிற்கிடையிலான ஒருங்கிணைப்பு போதியளவு காணப்படாமை இன்றைய களவிஜயத்தில் தென்பட்டதாகவும் சாம்பல் தீவு களப்புசார் பிரதேசத்தில் நிர்மாணிப்புக்கள் உட்பட சகல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமான தற்போது கிடைக்கப்பெற்ற அனுமதிக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக உடன் இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்களவிஜயத்தில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலார் ஜே.எஸ்.அருள்ராஜ்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் டொக்டர் ஞானகுணாளன்,திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -