நாட்டிலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி திறக்கப்படவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாலையூற்று பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை திறப்பதற்காக டெங்கு காட்டுப்பாட்டு புகை விசிறல் நடவடிக்கைகள் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் இன்று(27) காலை நடைபெற்றுவருகின்றன.
அதேபோன்று திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்களிலும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி டெங்கு புகை விசிறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேபோன்று நகரிலுள்ள பாடசாலைகளில் பெற்றோர்கள், பழைய மாணவர்களினால் சிரமதானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
