ஜே.எப்.காமிலா பேகம்-
தேர்தல் பிரசார மேடையில் இறந்தகால சம்பவத்தை பற்றி சொல்லிய விடயம் திரிபுபடுத்தப்பட்டுவிட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் கூறியுள்ளார்.
இன்று 7 மணிநேரம் சி.ஐ.டியினர் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்தனர்.
அதன் பின் ஊடகங்களுக்குப் பேசிய அவர், ‘நான் யாருடைய மனதையும் புண்படுத்த அவ்வாறு சொல்லவில்லை. நான் கடந்தகால சம்பவமொன்றை நினைவுப்படுத்தி கூறினேன். ஆனால் அது சிங்கள மக்களின் வாக்குகளை உடைப்பதற்காக திரிபுபடுத்தப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.
