மூதூர் 64ஆம் கட்டைப் பகுதியில் நடைபெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 வயதான அம்பியூலன்ஸ் சாரதி விளக்கமறியலில்


எப்.முபாரக்-
மூதூர் 64ஆம் கட்டைப் பகுதியில் நடைபெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 வயதான அம்பியூலன்ஸ் சாரதியை அடுத்த ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.சம்சுதீன் இன்று (25) உத்தரவிட்டர்.
இந்த சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியமைக்கான வைத்திய பரிசோதனைச் சான்றிதழ் பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தோப்பூரிலிருந்து மூதூருக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று (24) மாலை பயணித்துக் கொண்டிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக 3ஆம் வருட மாணவன் ஜே.அஹ்ஸான் (24 வயது) மேற்படி நபர் செலுத்திய அம்பியுலன்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.இதன் போது அம்புலன்ஸ் சாரதி கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -