எது இணைவைப்பு ? (இஸ்லாம்)


بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

எது இணைவைப்பு ?

الْحَمْدُ للّٰهِ رَبِّ العَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أجْمَعِيْن

நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கமானது இஸ்லாம்.

இந்த இஸ்லாம் மார்க்கம் ஐந்து தூண்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

அந்த ஐந்து தூண்களிலும் முதன்மையான தூணாக இருப்பது *"லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ"* என்கின்ற அஷ்ஷஹாதா.

அதாவது *உண்மையிலேயே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை மேலும் முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் அடியானும் தூதரும் ஆவார்"* .
இந்த ஷஹாதத்திற்கு பிறகுதான் மற்ற கடமையான அமல்களான

தொழுகை,
ஜகாத்,
நோன்பு,
ஹஜ்
போன்ற அமல்கள் வருகின்றன.

ஒரு மனிதருடைய அமல்களில் *ஷிர்க் (இணைவைப்பு)* கலந்து விட்டால் அவர் செய்யும் அவ்வமல்கள் யாதொரு நன்மையையும் பெற்றுத் தர இயலாது.

அல்லாஹ் தஆலா கூறுகிறான்:


*وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ*
*بَلِ اللَّهَ فَاعْبُدْ وَكُن مِّنَ الشَّاكِرِينَ*

*(நபியே!) “நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்துவிடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர்” என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது*.
*ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகிவிடுவீராக!*

*ஸூரத்துஸ் ஸுமர் : 65,66*

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

*وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا يَعْمَلُونَ*

*அவர்கள் (அல்லாஹ்வுக்கு இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்), அவர்களை விட்டு அழிந்துவிடும்.*

*ஸூரத்துல் அன்ஆம் : 88*

எனவே அல்லாஹ்விற்கு இணைகற்பிக்காமல் கலப்பற்ற முறையில் அவனை மட்டுமே வணங்கிட ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அல்லாஹூ சுப்ஹானஹூ வதஆலா அவனுடைய தூதர்களை இச்செய்தியை எத்திவைக்க அனுப்பினான்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்:

*وَلَقَدۡ بَعَثۡنَا فِی كُلِّ أُمَّةࣲ رَّسُولًا أَنِ ٱعۡبُدُوا۟ ٱللَّهَ وَٱجۡتَنِبُوا۟ ٱلطَّـٰغُوتَ*

*நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; போலியான கடவுள்களை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்*

*ஸூரத்துந் நஹ்ல் : 36*

மேலும் அல்லாஹ் தஆலா கூறுகிறான் தன்னுடைய திருமறையில்:

*وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِیَعۡبُدُونِ*

*இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை*

*(ஸூரத்துத் (Dh)தாரியாத் : 56)*

*இணைவைப்பு ஷிர்க் என்றால் என்ன?*

அஷ்ஷிர்க் என்றாள் படைத்தாள்வதிலும் வணக்கவழிபாடுகளிலும் அல்லாஹ்விற்கு மற்றதை (அல்லது மற்றவர்களை) இணையாக்குவது.

அல்லாஹ்விற்கு மட்டுமே ஒரு நற்செயலை அல்லது ஒரு வழிபாட்டை செய்ய முடியும் என்றிருக்க, அவ்வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது.

*உதாரணமாக: அழைத்து பிரார்தித்தள்*

அழைத்து பிரார்திப்பது என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே செய்யப்ப்டும் வணக்க வழிபாட்டாகும்
எனவே ஒருவர் அல்லாஹ் அல்லாதவைகளை அழைத்து பிரார்தித்தாள், அவர் இணைவைப்பில் விழுந்து விடுகிறார்.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக

அல்லாஹ் கூறுகிறான்:

*وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ*

*இன்னும், உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன், நிச்சயமாக, என்னை வணங்குவதைவிட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர்_ அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்”.*

*ஸூரத்துல் (G)காஃபிர் : 60*

மேலும் இந்த ஷிர்க்கை பற்றி லுக்மான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தன்னுடைய மகனுக்கு செய்த அறிவுரையை அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்:

*وَإِذۡ قَالَ لُقۡمَـٰنُ لِٱبۡنِهِۦ وَهُوَ یَعِظُهُۥ یَـٰبُنَیَّ لَا تُشۡرِكۡ بِٱللَّهِۖ إِنَّ ٱلشِّرۡكَ لَظُلۡمٌ عَظِیمࣱ*

*மேலும், லுக்மான் தன் மகனுக்கு உபதேசம் செய்தவராக என் அருமை மைந்தனே!* *நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக, இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும் என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!)*

*ஸூரத்துல் லுக்மான் : 13*

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

*إِنَّ ٱللَّهَ لَا یَغۡفِرُ أَن یُشۡرَكَ بِهِۦ وَیَغۡفِرُ مَا دُونَ ذَ ٰ⁠لِكَ لِمَن یَشَاۤءُ*

*நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்*

*ஸூரத்துன் நிஸா : 48*

எனவே அல்லாஹ்வின் அடியார்களே , ஒர் மனிதனின் வாழ்வில் *ஷிர்க்* என்பது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அல்லாஹ்வின் உதவியை கொண்டு *இவ்விணைவைப்பில் நாம் விழுந்து விடாமல் இருப்பது நம்மீது கடமையாக இருக்கின்றது* , அதற்கு முதலில்

*எது இணைவைப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்,*

*எச்செயல்கள் இணைவைப்பாக ஆகிவிடும்*
*என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்*

*ஆகவே எது இணைவைப்பு* என்ற தொடர் தலைப்பில் சிறிய ஒரு முயற்சியாக இனிவரும் காலங்களில் இன் ஷா அல்லாஹ் நம் பள்ளி சார்பாக *ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது அத்தமீமி அவர்கள் எழுதின القواعد الأربع (நான்கு விதிகள்)* என்னும் அப்புத்தகத்தினுடைய தமிழாக்கத்தை பகுதி பகுதியாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

டெலிகிராம் மூலமாக இவைகள் உங்களை அடைய கீழுள்ள நமது பள்ளி டெலகிராம் லின்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளவும்.

Brother Aslam (Madeena University)

https://t.me/masjid_as_siddheeq


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -