திருகோணமலை மாவட்டத்தின் நீண்ட வெயில் காலத்திற்கு பின்னர் நேற்றிரவிலிருந்து(25) இன்று(26) அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் மழைநீரில் மூழ்கி காணப்படுவதோடு சிறுவீதிகளும் மூழ்கியுள்ளது.
இம்மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலாகாமம், திருகோணமலை மற்றும் வான்எல போன்ற பகுதிகளிலும் கடும் மழை பெய்துள்ளது.
நீண்ட வெயில் காலநிலைக்குப் பின்னர் பெய்த கடும் மழை நீர் விவசாயத்திற்கு மிகவும் பிரயோசனமாக காணப்படுவதோடு, வீட்டுத்தோட்டம் மற்றும் தோட்டப் பயர்ச் செய்கைகளுக்கும் இன்றியமையாததாகவுள்ளது. பின்தங்கிய கிராமங்களில் தாழ்நிலப் பகுதிகள் மழை நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
