கருணா 1200 படையினரையும் 600 பொலிஸாரையும் கொலை செய்தது உண்மை – சரத் பொன்சேகா


முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் கொலை செய்தார் என்பது உண்மை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பது போன்று ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் 3000 இராணுவத்தினரை அவர் கொலை செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணையிரவு முகாமினை ஒரே இரவில் தொடர் தாக்குதல்களினால் கைப்பற்றிய போது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்று குவித்தோம் என அண்மையில் கருணா அம்மான் தெரிவித்தமை தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்தேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர் பெரும் வீரராக முயல்கின்றார். ஆனால் அவர் சரணடைந்த வீரர்களையே கொலை செய்தார் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரனமுன கருணாவிற்கு பதவி வழங்கியுள்ளது. அரசாங்கம் அவரை காப்பாற்றுகின்றது எனவும் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருணாவை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் சரத்பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -