அம்பகமுவ பிரதேச செயலகத்தில் வாகன அனுமதி பத்திரம் பெறுவதில் பெறும் சிரமங்களை எதிர்நோக்குவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ம்பகமுவ பிரதேச செயலனத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரத்தனை பெறுவதில் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் வாகன உரிமையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும் அம்பகமுவ பிரதேச சபை இது குறித்து எவ்வித கவனம் செலுத்துவதில்லை. என்று இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து; கருத்து தெரிவிக்கையில் நான் வாகன வருமான உத்தரவு பத்திரத்தனை பெறுவதற்காக கடந்த மார்ச் மாதம் தேவையான ஆவனங்களை தேடிக்கொண்டேன் ஆனால் கொரானா தொற்று பரவல் காரணமாக இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டு கடந்த வாரம் தான் ஆரம்பித்துள்ளனார். ஆனால் இங்கு வருபவர்களுக்கு பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பப்படுகின்றன. நுவரெலியா மாவட்டத்தினை பொறுத்தவரையில் 90 சதவீதமானோர் ஏதாவது ஒரு பினேன்ஸ் கம்பனி ஊடாகவே வாகனங்களை பெற்றுக்கொண்டுள்ளனர.; ஆனால் அவர்கள் வாகன உரிமை புத்தகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட போட்டோ பிரதி ஒன்றினை சமர்ப்பித்த போதிலும் அது ஒரு மாதத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும.; என திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இது குறித்த பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததும் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி ஒரு மாதத்திற்குட்பட்டு இருக்க வேண்டும். என்று இதனை பெறுவதற்கு மூல காரணமாக கருதப்படுவது லீசிங் தவணைக்கட்டணம் நிலுவையில் இல்லாமல் கட்டியிருந்தால் மாத்தரமே குறித்த புத்தகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி பெற்றுக்கொடுப்பதாகவும் இல்லாவிட்டால் அதனை செலுத்திய பின்னரே குறித்த பிரதி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
எனினும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் லீசிங் மூலம் பெற்றுக்கொடுத்த வாகனங்களுக்கு ஆறு மாத சலுகை காலம் பெற்றுக்கொடுதிருப்பதாகவும் இதனை தொடர்ந்து கண்காணத்து வருதாகவும் அரசாங்கம் அடிக்கடி தெரிவித்துள்ளன அப்படி என்றால் இந்த விடயத்திற்கு செல்லுபடியாகாதா? என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதிகமானவர்கள் தங்களது வானத்தினை கொழுப்பில் அல்லது கண்டியில் லீசிங் செய்திருப்பதாகவும் ஆனால் இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகள் காணரமாக பலர் பல்வேறு சிரமங்களுக்கு உட்படுவதாகவும் பணமும் நேரமும் வீணே செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஒரு சில லீசிங் கம்பனிகளிடம் வினவிய போது தாங்கள் வழங்கும் உறுதி செய்யப்பட்ட வாகன புத்தகத்தின் போட்டோ பிரதி ஆறு மாத காலத்திற்கு செல்லபடியானது என்றும் அவர்கள் தெரிவி;க்கின்றனர்.
இது குறித்த நுவரெலியா மாவட்டச் செயலாளர் புஸ்குமாரவிடம் கேட்ட போது லீசிங் கம்பனிகள் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட புத்தகத்தில் ஒரு மாதத்திற்கு செல்லுபடியானது. என முத்திரை குத்தப்படுவதாக தெரிவித்த போதிலும் வாகன உரிமை புத்தகத்தில் அவ்வாறு திகதி எதுவும் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் நிராகரிக்கப்பட்ட வாகன வருமான உத்தரவு பத்திரம் ஒன் லைன் மூலம் அவ்விடத்திலேயே விண்ணப்பித்து தற்காலிக பத்திரனை பலர் பெற்றுக்கொண்டனர்.
எனவே கனணி தொழிநுட்ப அறிவு இல்லாதவர்களுக்கு அநீதி நிகழ்வதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது முக்கியமானதாகும.; எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பலரும் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -