ஓய்வு பெற்று செல்லுகின்றார் கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் மனாஸ்


சர்ஜுன் லாபீர்-
ல்முனை பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடந்த 2013ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை கடமை புரிந்து வந்த எம்.ஏ.எச்.எம் மனாஸ் தனது 29 வருடகால அரச சேவையில் இருந்து எதிர்வரும் 10ம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் செல்லுகின்றார்.

இவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று(06)கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பொது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் 01ச் சேர்ந்த இவர் 1960ம் ஆண்டு 7ம் மாதம் 10ம் திகதி முகம்மது அபூவக்கர் ஹபீபா உம்மா மற்றும் முகம்மது இஸ்மாயில் அபூபக்கர் ஆகியோருக்கு மகனாக மருதமுனையில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கல்வியை மருதமுனை ஹம்றா வித்தியாலயத்திலும்,பின்னர் தனது இடை நிலைக்கல்வியை கல்முனை பற்றிமா கல்லூரி,மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரிகளிலும் கல்வி கற்றார்.

இவர் 1993ம் ஆண்டு 3ம் மாதம் 22ம் திகதி பொது எழுது வினைஞராக கல்வி அமைச்சில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் அட்டாளைச்சேனை கல்வி கல்லூரியில் 10 வருடங்கள் கடமையாற்றினர்.அதன் பின்னர் கல்முனை பிரதேச செயலகத்தில் 8 வருடங்களும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரண்டு வருடங்களும் கடமையாற்றி மீண்டும் 9 வருடங்கள் கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி எதிர்வரும் மே மாதம் 10ம் திகதியுடன் ஓய்வு பெறுகின்றார்.

அமையான சுபாவம் கொண்ட இவர் கடமையில் கண்ணியமாகவும்,நேர்மையாகவும் செயற்படுபவர் என்பதோடு எல்லோரிடனும் அன்பாகவும் பண்பாகவும் பழககூடிய ஒரு நல்ல மனிதர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் பிரதேச செயல்க கணக்காளர் வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ நஜீம்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல்,பிரதம முகாமைத்துவ சேவை அதிகாரி எம்.என் எம்.ரம்சான் நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் பி.எம் பதுரூத்தீன்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முஹர்ரப் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -