ஜே.எப்.காமிலா பேகம்-
கடந்த வருடம் தான் தனது மகன் சட்டத்தணிரயாக சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு பிரித்தானியாவிலிருந்து திரும்பியதாகவும், ஆனால் ஒருசில ஊடகங்கள், கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அரச உதவியுடன் நாடு திரும்பிய மாணவர்களில் தனது மகனும் இருந்து குழப்பம் ஏற்படுத்தியதாகவும் செய்திகளை வெளிட்டதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லகூறி உள்ளார்.
தற்போது மகன் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாக, வெளிவந்த செய்திகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளார்.
