அம்கோர் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள்வழங்கப்பட்டது.


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கமைய மட்டக்களப்பைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்கோர் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் 19 நோய்த்தொற்றினையடுத்து நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட தொடர் ஊரடங்கினால் கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச மக்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டனர்.

அம்கோர் நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் மினிப்பே பிரதேச மக்களுக்காக சுமார் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் ஒவ்வொன்றும் 1,080 ரூபாய் பெறுமதியான 1536 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இப்பொதிகள் மட்டக்களப்பிலிருந்து கொண்டு செல்லப்பட்டு அம்கோர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ப.முரளிதரன் மினிப்பே பிரதேச செயலாளர் திருமதி.வத்சலா மாரம்பகேவிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.சிவயோகராஜன், உதவி முகாமையாளர் பிறிஸ்லி றோய், திட்ட உத்தியோகத்தர் அ.செல்வக்குமார் மற்றும் உதவி பிரதேச செயலாளர் கீர்த்தி திசாநாயக்க, பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பௌத்த மதகுருமார் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 நோய்த்தொற்றினையடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை, பொலநறுவை, கம்பகா மற்றும் கண்டி மாவட்டங்களில் இவ்வாறான உலர் உணவு விநியோகம் அம்கோர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -