நாட்டில் கொரோனா அபாயம் நீங்கிவிட்டதாக கருதமுடியாது.! கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் சுகுணன் கருத்து.


காரைதீவு நிருபர் சகா-
நாட்டில் கொரோன அபாயம் நீங்கிவிட்டதாகக் கருதமுடியாது. மக்கள் மிகவும் அவதானமாக சுகாதாரக்கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் நாட்களில் நடந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

லண்டன் அகிலன் அறக்கட்டளை நிதியத்தினால் டிஜிடல் உடல்வெப்பமானி வழங்கிவைக்கும் வைபவம் நேற்று கல்முனை பிராந்தியசுகாதாரப்பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

லண்டன் அகிலன் அறக்கட்டளை ஸ்தாபகர் கோபாலப்பிள்ளையினால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு 15000ருபா பெறுமதியுடைய 25 கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் நிகழ்வு அம்பாறை மாவட்ட அகிலன் அறக்கட்டளை அமைப்பாளர் சோ.வினோஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் .சுகுணன் மேலும் உரையாற்றுகையில்:
இதுவரை எமது பிரதேசத்தில் ஆக இருவரே தொற்றுக்குள்ளாகி சுகமடைந்துள்ளனர். எமது பகுதி மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பூரணமாக கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு இது சாட்சியம். தற்சமயம் பாதுகாப்பாக இருக்கிறது. எமது வைத்தியஅணியினர் சிறப்பாகத் தொழிற்படுகின்றனர்.
எமது வேண்டுகோளுக்கமைவாக எமக்கு 15வெப்பமானிகளும் மட்டக்களப்பிற்கு 10வெப்பமானிகளும் வழங்கப்பட்டுள்ளன.அதற்காக அகிலன் பவுண்டேசனுக்கும் அதன் ஸ்தாபகர் கோபாலபிள்ளை ஜயாவிற்கும் நன்றிகள் வாழ்த்துக்கள். என்றார்.
நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பதில் சுகாதார பணிப்பாளர் டாக்டர் .எஸ்.நவலோஜிதன் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா ; இலங்கை அகிலன் அறக்கட்டளை இணைப்பாளர் வி.ஆர். மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் கல்முனை பிராந்திய தொற்றுநோய்க்கான பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் சமூக சேவையாளருமான கே.ஜெயசிறில் உயிரியல் பொறியியலாளர் இ.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு இவ்வுபகரணங்களை வழங்கி வைத்தனர்.

அங்கு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர் தஸ்லிமா டாக்டர் மதன் டாக்டர் அஜ்வத் டாக்டர் கணேஸ்வரன் டாக்டர் றிஸ்பின் ஆகியோருக்கு டிஜிடல் உடல்வெப்பமானி வழங்கிவைக்கப்பட்டது.
.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -