கலாநிதி ஷுக்ரி அவர்களின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்க்கு பெரிய இழப்பாகும் : எச்.எம்.எம். ஹரீஸ் இரங்கல் !


அபு ஹின்ஸா-
றைந்த முன்னாள் நளீம் ஹாஜியுடன் இணைந்து ஜாமியா நளீமியா அரபு கலாசாலையை உருவாக்கி அக்கலாசாலையின் பணிப்பாளராக இருந்த கலாநிதி ஷுக்ரி அவர்கள் காலமானார் (இன்னாஹ்லில்லாஹி வஇன்னாஹ் இலைஹி ராஜிஊன்) எனும் செய்தி என்னை வந்தடைந்தவுடன் மிகவும் கவலையடைந்தேன்.

இலங்கையில் தற்காலத்தில் வாழ்ந்த சிறந்த கல்விமான்களில் முக்கிய ஒருவரான இவர், இலங்கை முஸ்லிம்களுக்கு அதிக உலமாக்களை உருவாக்கி மார்க்க ரீதியாகவும் சமூக விடயங்களிலும் அளப்பெரும் தொண்டாற்றியதோடு அதிகமான இஸ்லாமிய மார்க்க அறிஞர்களையும் கல்விமான்களையும் உருவாக்கி முஸ்லிம்களின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த ஆளுமையாவார் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

தனது இரங்கல் அறிக்கையில் புனிதமிகு ரமழானின் இறுதிப்பத்தில் நிகழ்ந்த இந்த அறிஞரின் இழப்பு முழு முஸ்லிம்களுக்கும் பாரிய துயரை ஏற்படுத்தியுள்ளதோடு ஈடு செய்யமுடியாத இடைவெளியையும் ஏற்படுத்தியிருப்பது பெரிதும் வேதனையளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கும் சக்தியை வல்ல இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவரது சமூக பணிகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை எல்லாம் வல்ல நாயன் வழங்கிட வேண்டும் எனவும் இரு கையேந்தி பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -