அனைத்து தாய்மார்களும் மதிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள் அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் சட்டத்தரணி. ஹபீப் றிபான்
எம்.ரீ. ஹைதர் அலி-
தாயின் முக்கியத்துவம் அந்தஸ்த்து பற்றி பல்வேறுபட்ட தெளிவுகளை குர்ஆன் மற்றும் ஹதீதுகளினூடாக இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த வகையில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "தாயின் காலடியில் சுவனம் உள்ளது" தாயின் காலடியில் சுவர்க்கம் என்பது தாய்க்கு கட்டுப்பட்டு, மரியாதை கொடுத்து கண்ணியப்படுத்த வேண்டும் என்பதாகும்.

மேலும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அது தாய்மைதான். தன் உதிரத்தை உரமாக்கி நம்மை வளர்த்த தாயினை என்றும் எம் நெஞ்சங்களில் சுமந்து, அவர்கள் நம்மை வளர்தெடுக்கபட்ட கஸ்டங்களை உணர்ந்து அவர்கள் என்றும் மதிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள்.
உயிருடன் தாயினை கொண்டுள்ள ஒவ்வொரு பிள்ளைகளும் தாயினூடாக இறைவனின் திருப்தியைப் பெற முயற்சி செய்ய வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொண்டதுடன், மேலும் இத்தினத்தில் அனைத்து தாய்மார்களையும் மதித்து அவர்களது தியாகங்களுக்கு பாராட்டுக்களையும் அன்னையர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார் சட்டத்தரணி ஹபீப் றிபான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -