ஹோமாகம பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்திற்கு எதிராக, கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு ஆதரவு பெருகிக் கொண்டு செல்கின்றது.
அந்த வகையில் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச , அதேபோல அவருடைய சகோதரரான யோசித்த ராஜபக்ச ஆகியோர் எதிர்த்து டுவிட் செய்துள்ளனர்.
எந்தவொரு விளையாட்டுத்துறையிலும் மைதானம் போன்ற அபிவிருத்திகள் செய்யத்தான் வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் அது அவசியமாகாது, என்று நாமல் ராஜபக்ச டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுகாதாரத்துறை பாரிய சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் இப்படியான மிகப்பெரிய முதலீட்டுடன் மைதானம் அமைப்பு தேவைதானா என்று ரக்பீ வீரராகிய யோசித்த ராஜபக்ச டுவிட்டரில் கேட்டுள்ளார்.
அதேபோல இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரொசான் மஹானாமவும் இந்த மைதானம் அமைப்புத் திட்டத்தை எதிர்த்துள்ளார்
