புனித "லைலத்துல் கத்ர்" இரவில் முஸ்லிம்கள் கண்ணியமாகவும் அமைதியாகவும் சமாதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும்


அறிவுரை பகர்கிறார் வை.எம்.எம்.ஏ. பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி 

மினுவாங்கொடை நிருபர்-புனித "லைலத்துல் கத்ர்" இரவில் முஸ்லிம்கள் கண்ணியமாகவும், அமைதியாகவும், சமாதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும். இரவு முதல் அதிகாலை வரையிலான வணக்க வழிபாடுகளை, வெளியிடங்களில் மேற்கொள்வதை முற்று முழுதாகத் தவிர்ந்து நடக்க வேண்டும். மாறாக, இரவு நேர வணக்க வழிபாடுகளை எமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் இணைந்து வீடுகளுக்குள்ளேயே புரிந்து கொள்வதற்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் என, வை.எம்.எம்.ஏ. யின் பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா தொற்றின் பரவலுக்கு மத்தியிலும், வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இம்முறை நாம் எமது ரமழான் நோன்புகளை நோற்று வருவது, அல்லாஹ் நமக்கு அளித்த மா பெரும் பாக்கியம் எனக் கருதவேண்டும்.
அத்துடன், புனித "லைலத்துல் கத்ர்" இரவை அடைந்திருக்கும் நாம், அந்த இரவில் கொரோனா தாக்கத்திலிருந்து எல்லோரும் மிகத் துரிதமாக தங்களது இயல்பு வாழ்க்கை நிலைக்கு மீளவும் திரும்ப வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் உளமுறுகிப் பிரார்த்திக்க வேண்டும்.
இதேவேளை, புனித "லைலத்துல் கத்ர்" இரவில் அனைவரும் தத்தமது இல்லங்களில் இருந்தவாறு குடும்பத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நல்லமல்களில் ஈடுபட வேண்டும். யாரும் வீடுகளுக்கு வெளியே சப்தம் வருமளவுக்கு ஒலிபெருக்கிகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்திக்கொண்டு, எந்தவகையான இபாதத்துக்களிலும் ஈடுபட முயற்சிக்கக்கூடாது.
புனித "லைலத்துல் கத்ர்" இரவில் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து தராவீஹ், தஸ்பீஹ், வித்ர், கியாமுல் லைல் போன்ற தொழுகைகளுக்காகவும் தெளபா, திக்ர், இஃதிகாப் மற்றும் ஏனைய இரவு நேர வணக்கங்களுக்காகவும் பள்ளிவாசல்களிலும், பொது இடங்களிலும் ஒன்றுகூடுவதை முற்றாகத் தவிர்ந்து நடந்து கொள்ளுமாறும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன்.இது தொடர்பாக ஜம் இய்யத்துல் உலமா, வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன வழங்கியிருக்கும் வழிகாட்டல்களைப் பேணி நடை முறைப்படுத்துமாறும், அத்துடன் அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறும் மீண்டும் கட்டாயக் கடப்பாடுகளுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
ஆகவே, இக்கட்டான இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறான வழிகாட்டல்களைப் பின்பற்றுவது இஸ்லாமியப் போதனை என்பதை மனதில் நிறுத்தி, அனைத்து முஸ்லிம்களும் கண்ணியமாகவும், அமைதியாகவும், சமாதானமாகவும் இம்முறை புனித "லைலத்துல் கத்ர்" இரவில் நடந்துகொள்ள முன்வர வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -