உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் கைது!


எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹிர் நகர் பிரதேசத்தில் உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது பயிற்சி பெற்றதாக கூறப்பட்ட நிலையத்தின் உரிமையாளர் நேற்று(9) மாலை குற்ற புலனாய்வு சிறப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பொலிஸார் இன்று(10)தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் மூதூர் பிரதச சபையின் முன்னாள் உப தவிசாளரான முகமட் ஹனிபா ஹாஜா மொகைதீன் (வயது 55) என கைது செய்த குற்றப் புலனாய்வு சிறப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

நேற்று மாலை பயிற்சி நிலையத்தின் உரிமையாளரின் தோப்பூர் பங்களா வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்வு சிறப்பு பிரிவினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி ஹாஜா மொகைதீனின், இக்பால் நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 30 வீடமைப்பு திட்டம் பகுதியில் அமைந்துள்ள அவரின் மற்றுமொரு வீட்டிற்கு அழைத்தச்சென்று அங்கு பயிற்சி வழங்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்திய பின் தோப்பூர் வீட்டிற்கு அழைத்து வந்து அவரை கைது செய்து கொழும்பிற்கு அழைத்துச் சென்றனர்.
கைதுசெய்யப்பட்ட ஹாஜா மெகைதீன் சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நல்லூர் நகர், தாகிர் நகர் பிரதேசத்தில் அரசாங்கத்தின் 15 ஏக்கர் காணியை பலவந்தமாக அபகரித்து பண்ணை ஒன்றை அமைத்து அதை பயங்கரவாதிகளின் பயிற்சி நிலையமாக நிர்வகித்து வந்ததன் அடிப்படையில் கைது இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்ட ஹாஜா மெகைதீனின் இடங்களில் ஆயத பயிற்சி பெற்றதாக விஷேட பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்பால் நகர் அபுரார் நகர் 30 வீட்டுத்திட்ட பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றும் நல்லுர் பகுதியில் உள்ள தாகீர் நகர் பகுதியில் உள்ள 15 ஏக்கரில் அமைந்துள்ள மூன்று வீடுகளும் தோப்பூர்-4, பங்களா வீதியில் உட்பட்ட மூன்று வீடுகளில் கடந்த மாதம் முதல் குற்றப் புலனாய்வின் விஷேட பிரிவினரால் சோதனை செய்யப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -