கிண்ணியா பொலிஸ் பிரிவிக்குட் பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயதுச் சிறுவனொருவன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கிண்ணியா, மாஞ்சோலையைச் சேர்ந்த ரனீஸ் சான் ஹனி எனும் சிறுவனே மரணமடைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
இச் சம்பவத்தில் காயமடைந்துள்ள அவரின் சகோதரர் இரண்டு வயதுச் சிறுவன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் மரணம் தொடர்பில், கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி குப்பைத்தம்பி நெஹ்மத்துல்லா சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்..
இக் சம்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,குறித்த வீடொன்றின் அருகாமையில் உள்ள வீடொன்று பழைய நிலையில் காணப்பட்டுள்ளது. சிறுவன் அதன் அருகில் விளையாடிக் கொண்டிருக்கையில், இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது.
