மலையகத்தின் வீரமிக்க ஆளுமையென்றால் அது ஆறுமுகம் தொண்டமான் : மீஸான்- ஸ்ரீலங்கா இரங்கல் அறிக்கை !


லங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி உத்தியோகபூர்வ நிகழ்வானது நேற்று (26) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
கௌரவ "கோபால் பாக்லேவை" சந்தித்து மலையக மக்களுக்கான 10000 வீட்டுத்திட்டத்தை பெற்று கொள்ள பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிகழ்வே என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பாரமாகிறது. அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு மலையக உறவுகளுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் மக்களுக்கும் பெரும் இழப்பாகும் என அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 55 வயது மட்டுமே ஆன அன்னாரின் இழப்பு மிகப்பெரும் துயரமே. பல அமைச்சுக்களை திறன்பட செய்துகாட்டி அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஐயா அவர்கள் மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் எப்போதும் கரிசனை கொண்டவராகவும், அப்பிரதேச மக்களின் உட்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டில் கரிசனை கொண்டவராகவும் இருந்து வந்துள்ளார். நாங்கள் மலையக பிரதேசங்களில் முன்னெடுத்த பல வேலைத்திட்டங்களுக்கு ஆலோசனைகள் வழங்கியது மட்டுமின்றி அதற்கான பல உதவிகளையும் செய்துதந்த ஒரு தலைவர் அவர் என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

அன்னாரின் இழப்பால் கவலையடைந்துள்ள மனைவி, மக்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் சகலருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -