தற்கொலை செய்ய முயன்ற யுவதியைக் காப்பாற்ற முயற்சித்த இளைஞன் பலி, யுவதி காப்பாற்றப்பட்டார்!நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள குதித்த பெண்ணை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொருப்திகாரி ருவான் பெர்னாந்து வினால் காற்றாப்பட்டுள்ளதுடன் தற்கொலை செய்ய நீர்தேக்கத்தில் குறித்த இளைஞனை தேடி மீட்கும் பனியில் தொடர்ந்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுட்பட்டு வருகின்றனர்

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் 21/05 காலை 10 மணியளவில் தலவாகலை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்காக கொத்தமலை நீர்தேக்கத்தில் குதித்துள்ளார்.

இதனை கண்ட அவ்வழியில் சென்ற 32 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணை காப்பாற்ற நீர்தேக்கத்தில் பாய்த்து அந்த பெண்ணை மீட்க போராடியுள்ளார் இந் நிலையில் விரைந்து செயற்பட்ட தலவாகலை பொலிஸ் நிலைய பொருப்திகாரி ருவான் பெர்னாந்து உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்கா லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

இருந்த போதிலும் குறித்த பெண்ணை காப்பாற்ற நீர்தேக்கத்தில் குதித்த இளைஞனை மீட்க பொலிஸார் தொடர்ந்து தேடுதல் பனியில் ஈடுபட்டுள்ளதுடன் ஆற்றிலுள்ள சேற்றில் சிக்குண்டிருக்கலாம் என தலவாகலை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -