வியாழேந்திரன் இளைஞர்களை உசுப்பேத்தி தமிழ், முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்-ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டக்களப்பு, வாகனேரி பகுதியில் வியாழக்கிழமை (28) மணல் அகழ்வுக்குச் சென்ற நபர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறி வாகனேரிப் பகுதியைச் சேர்ந்த ஐவர் காயங்கள் அடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தின் பின்னர் சுமூகமான முறையில் தமிழ், முஸ்லிம் உறவுகள் பேணப்பட்டு வரும் நிலையில், அதில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த பிரச்சினை தொடர்பில் இரு சமூகங்களும் சுமூகமான முறையில் வாழ வேண்டும் என்பதற்காக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, அமைப்புக்கள், பள்ளிவாசல்கள், போன்றவைகள் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறன.

அதனை குழப்பியடித்து அரசியல் இலாபம் தேடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இனவாதத்தைக் கக்குகின்ற வகையில் வெள்ளிக்கிழமை (29) மாத்திரம் மூன்றுமுறை குறித்த பகுதிக்குச் சென்று இளைஞர்களை உசுப்பேத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மேற்கொள்ளும் இச் செயற்பாட்டை பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.

எனவே, சுமூகமான முறையில் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை பூதாகரமாக ஆக்கி கேவலம் கெட்ட அரசியலை வியாழேந்திரன் செய்வதற்கு எத்தனிக்கின்றார். இவ்விடையம் தொடர்பில் வாகனேரிப் பிரதேச இளைஞர்களும் ஏனைய மக்களும் அவதானாமாக செயற்பட வேண்டும்.

அத்தோடு, குறித்த பிரச்சினை தொடர்பில் அரசாங்க அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓட்டமாவடி பிரதேச செயலாளர் நிகாரா மெளஜூத் மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் இணைந்து சுமூகத்தீர்வுகாண முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -