மருதமுனையின் பொது வரலாறு ஆவணப்படுத்தப்படும் போது கல்விமான் மர்ஹூம் காதர் இப்றாஹீமின் வெற்றிடம் உணரப்படும்.


கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை அனுதாபம்

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனையின் பொது வரலாறு ஆவணப்படுத்தப்படும் போது கல்விமான் மர்ஹூம் எம்.எச் காதர் இப்றாஹீமின் வெற்றிடம் உணரப்படும்.அவரது மறைவு மருதமுனையின் கல்வி வரலாற்றில் பேரிழப்பாகும் என கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.

கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் தலைவர் பேராசிரியர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் கபூரி,ஊடக இணைப்பாளர்,விரிவுரையாளர் அஷ்ஷேய்க் அன்சார் பழீல் மௌலானா நழீமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

மருதமுனையின் வரலாற்று நூல்கள் சில தனிநபர்களால் உதிரிகளாக வெளியீடு செய்யப்பட்டாலும் இதுவரை மருதமுனையின் பொது வரலாறு நிறுவனமயப்படுத்தப்பட்ட ரீதியில் ஆவணப்படுத்தி வெளியீடு செய்யப்படவில்லை.அவ்வாறு வெயீடு செய்யும் போது கல்விமான் காதர் இப்றாஹீமின்;; சேவையும்,தேவை நிச்சயம் உணரப்படும்

கடந்த 2020-05-23ஆம் திகதி உயிரிளந்த கல்விமான் எம்.எச்.காதர் இப்றாஹீம் என்ற கல்விமான் ஆசான், அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர், சமூக முற்போக்காளர் என்ற பல்வேறு பரிமாணங்களுக்கு அப்பால் மருதமுனையின் இறந்த காலக் கதைகளையும்,சம்பவங்களையும் நிகழ்கால சமூகத்திற்கு குழுக் கலந்துரையாடல்கள் மூலம் கவர்ச்சிகரமாக முன் வைக்கும் அபாரத் திறமையைக் கொண்டிருந்தார்.

அன்னார் தனது பரந்த வீட்டு முற்றத்தில் வட்டமாக தனது நலன் விரும்பிகளை அமர வைத்து, கௌரவித்து,அழகு பார்த்து உரையாடல்களை மேற்கொள்ளும் பாங்கும், விஜயம் செய்யும் அனைவரையும் உடனடியாக அவரது வீட்டை விட்டு வெளியேற மனமில்லாத நிலையை ஏற்படுத்தும் என்ற அம்சம் அவரது ஆளுமைப் பன்புகளில் ஒன்றாகும்.

மருதமுனைக்கான தனியான பிரதேச சபை என்ற எண்ணக்ருவுக்கு வரலாற்று ரீதியில் நியாயம் கற்பிக்கும் முக்கியஸ்த்தராகவும் இது தொடர்பில் மருதமுனை ஜம்மியத்துல் உலமா, அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் முன்னெடுத்த ஆவணப்படுத்தலுக்கு பங்களிப்புச் செயதவர்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் - 2015 இறுதியில் முன்னாள் அமைச்சர் கௌரவ றஊப் ஹக்கீம் மருதமுனை அல்மனாரில் கலந்து கொண்ட வைவத்தில் தற்துணிவாக மகஜரைக் கையளித்தமையையும் சென்ற 2 வருடங்களுக்கு முன் அம்பாரை மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜரை நெறிப்படுத்தி அதற்கான ஓர் அணிந்துரையையும் வழங்கிய முற்போக்கு சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார்.

இதிலிருந்து மருதமுனையின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து எந்த வகையிலும் விடுபட முடியாத ஒரு முன்னோடி என்பதை அவரை நேசிக்காதவர்கள் கூட ஏற்றுக் கொள்வர்.மருதமுனையின் அரசியல் தந்தை முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் செனட்டர் எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானாவுக்கு 2007ஆம் ஆண்டு மருதமுனையில் நடைபெற்ற பெரும் பாராட்டு விழாவிலும், முன்னாள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் உயிரோடு இருக்கும் போது அவரது சொந்த ஊரில் செய்ய முடியாமற் போன பாராட்டு விழாவை மருதமுனை மன்னில் 2013ஆம் ஆண்டு இல் அவரது தலைமையில் திறமையான ஆளனியினரைப் பயன்படுத்தி வெற்றிகரமாக நடாத்தி முடித்தமையையும் மருதமுனை வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட வேண்டிய முக்கிய இரு நிகழ்வுகளாகும்.

அன்னாரது பாவங்களை வல்ல அல்லாஹ் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சுவனத்தை வழங்க கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருறும் உறவினர்கள், நலன்விரும்பிகள் ஆகியோருக்கு உயர் மனோ வலிமையை இறைவன் வழங்க வேண்டும் எனவும் அவரது சமூகப் பணிகளை அவரது குடும்பம் 'காதர் இப்றாஹீம் பௌன்டேசன்' என்ற பெயரில் முன்னெடுக்க எமது பேரவை எதிர்பார்க்கின்றது.என அந்த அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -