நிந்தவூர் மண்ணுக்கு மற்றுமொரு கௌரவம்.


முஹம்மட் ஜெலீல்-
ம்பாரை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகராக( IP) கடமையாற்றும் நிந்தவூர் 4ம், பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட அலியார் றபீக்"அவர்கள் இன்று முதல் *பிரதம பொலிஸ்* பரிசோதகராக (CI) ஆக இலங்கை பொலிஸ் தினைக்களத்தினால் பதவி உயர்வு பெற்று உத்தியோகபூர்வமாக தனது பதவியினைப் பொறுப்பேற்று எமது நிந்தவூர் மண்ணிர்க்கு பெருமை சேர்த்துள்ளார்.

*32வருடங்களாக* இலங்கையின் பாதுகாப்புத்துறையான (பொலிஸ்)சேவையில் கடமையாற்றும் இவர் நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ளதோடு பொலிஸ் நிலையத்தின் பல முக்கிய பிரிவுகளில் பதவியமர்த்தப்பட்டு திறன்பட சேவையாற்றியுள்ளார்.
அந்த வகையில் தனது ஆரம்ப பொலிஸ் சேவையினை கொழும்பிலும் பின்னர் மொனறாகலை,தனமல்விலை,வீரக்கொடை ,வவுனியா,கல்முனை போன்ற பல இடங்களில் தனது பொலிஸ் கடமையினை நிறைவேற்றியுள்ளார்.
அதன் பின்னர் தங்கலையில் உ.ப பொலிஸ் பரிசோதகராகவும் ( SI) வெல்லவா பிரதேசத்திலும் பணியாற்றி பொலிஸ் பரிசோதகராக( IP ) பின்னர் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல்காஸிம் அவர்களது மெய்ப்பாதுகாவலராக எட்டு வருடங்கள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது சேவைக்காலத்தில் பொலிஸ் நிருவாகப் பிரிவில் கூடிய அநுபவம் வாய்ந்தவராக கானப்படுவதோடு
தற்பொழுது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் *நிருவாகப்பிரிவு(Admission Unite)பொறுப்பதிகாரியாக* கடமையாற்றிய நிலையிலேயே இவருக்கு இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடமையில் கண்னியமும் கட்டுப்பாடுடனும் நடக்கூடியவராகவும் எப்போதும் மக்களுடன் நேர்மையாகவும் பண்பாக நடந்து கொள்வதோடு பொதுச் சிந்தனைமிக்க இவரது தன்னலமற்ற சேவை எமது ஊருக்கும் முழு நாட்டிற்கு சென்றடைய நிந்தவூர் மண் சார்பாக வாழ்த்துகின்றோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -