மனிதாபிமானம் எங்கே செல்கிறது மூளை வளர்ச்சி குன்றிய தர்ஹா டவுன் 14 வயது சிறுவனை தாக்கும் பொலிசார் -வீடியோ இணைப்பு

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

மூளை வளர்ச்சி குன்றிய (அங்கவீனமான) 14 வயது சிறுவனை அடித்து உதைத்த இலங்கைப் பொலிஸ் பாராட்டப்பட வேண்டியவர்கள்? மனிதாபிமானம்இ நாட்டுப்பற்று எல்லாம் இல்லாத ஒருசில பொலிஸ் அதிகாரிகள் இந்த நாட்டுக்குத் தேவையா? புத்தி ஜீவிகளும்இ சமுக ஆர்வளர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த ஊரடங்குச் சட்ட நேரத்தில் தர்ஹா டவுனைச் சேர்ந்த சுய நினைவற்ற சிறுவன் வீதியில் வந்துள்ள வேளை அவனை பிடித்து விசாரிக்காமல் தமது அகங்கார கைவரிசையைக் காட்டி அவனை அடித்து உதைத்தது மட்டுமல்லாமல் வீதியில் வந்த மனிதாபிமானமற்ற காடையர்களும் சேர்ந்து அடிக்கும் அளவிற்கு பொலிஸாரின் செயற்பாட்டடை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்றதா? அப்பாவிகளுக்கு இவ்வாறுதான் அரசு நடவடிக்கை எடுக்குமா? என மக்கள் கேட்கின்றனர்.

குறித்த சிறுவன் என்ன கொலைக்குற்றம் புரிந்தவனா? அல்லது களவு எடுத்தவனா? அல்லது விபச்சாரம் செய்தவனா? இவ்வாறு மனித நேயமற்ற வகையில் அவனை அவர்கள் அடிப்பதற்கு. ஒருசில தகுதியற்ற பொலிஸாரால் ஏனைய பொலிஸாரின் சிறந்த சேவைக்கும் இவர்கள் கலங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

இது விடயத்தில் குறித்த அங்கவீனமான சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும்இ சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரும்இ வீதியில் வந்து அவனைத் தாக்கிய காடையர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாட்டின் நீதியைக் காப்பாற்றுவார்களா? முஸ்லிம் அரசியல் தலைமைகளே இது உங்களின் கவனத்திற்கு. (வீடியோ ஆதரங்கள் தாராளமாகவே இருக்கின்றன) இலங்கையில் சமாதானம் ஏற்படாததற்கு இவ்வாறானவர்கள் தான் காரணம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -