தெலங்கானா மாநிலம் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில்
கோவர்தனின் 3 வயது மகன் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் மாலை 5 மணிக்கு தவறி விழுந்துள்ளான்.
சிறுவன் 25 முதல் 30 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டு வருகிறது.
விளக்குகள் பொறுத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குழிக்குள் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமலிருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
