பேர்ள் துறைமுக தாக்குதல், நியுயோர்க் உலக வர்த்தக மைய தாக்குதலை விட கடுமையான வேதனையை அமெரிக்கா சந்திக்கும்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
நியூயோர்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தாக்குதல், ஜப்பான் நடத்திய பேர்ள் துறைமுக தாக்குதல், ஆகியவற்றின் போது அமெரிக்கர்கள் சந்தித்த துயர நிலையை விட இந்த வாரம் அதிகமாக சந்திக்க போகிறார்கள் என்று அமெரிக்கா அரசாங்கத்தின் தலைமை சத்திர சிகிச்சை நிபுணர் ஜெரோம் அடம்ஸ் (Jerome Adams) தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளும் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா கொரோனா தாக்குதலுக்கு தினம் தோறும்
மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11 ஆயிரம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
நியூயோர்க் நகரத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரந்துள்ளார்கள். இந்நிலையில் அடுத்துவரும் இரு வாரங்கள் அமெரிக்கர்களுக்கு மோசமானதாக இருக்கும் என்பதால் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும், பொதுமக்கள் விலகியிருப்பதை கடைபிடிக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் Surgeon General Vice Admiral வைத்தியர் ஜெரோம் அடம்ஸ் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கையை விடுத்து கூறியதாவது:-

அமெரிக்க வரலாற்றில் கொரோனா வைரஸ் பரவலால் மறக்க முடியாத மிகப்பெரிய இருண்ட சம்பவங்களை உருவாக்கப் போகிறது. இதற்கு முன்னர் அமெரிக்கா இரு மோசமான சம்பவங்களைத்தான் வரலாற்றில் கண்டுள்ளது. 1வது பேர்ள் துறைமுகம் ஜப்பானால் தாக்கப்பட்டது, 2வது நியூயோர்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தாக்குதல் உசாமா பில்டேனால் நடத்தப்பட்டது ஆனால் அடுத்த வாரம் பேர்ள் துறைமுகம், நியுயோர்க உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தாக்குதலில் அமெரிக்கர்கள் அனுபவித்த வேதனையைப் போன்று அனுபவிக்கப் போகிறார்கள்.மிக மோசமான சம்பவங்கள், அமெரிக்கர்கள் வாழ்க்கையில் சந்தித்திராத கடினமான சம்பவங்களை எதிர்கொள்ளப் போகிறார்கள். இந்த சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கொரோனா வைரஸ் வளைவு கோட்டை நாம் மட்டுப்படுத்த வேண்டுமானால், அனைவரின் பங்களிப்பும் அவசியமானதாகும்.
இந்த வாரம் நிச்சயம் நமக்கு மோசமான வாரமாக இருக்கும், நமது வாழ்க்கையில் சந்திராத மோசமான அனுபவங்களை சந்திப்போம். வோஷிங்டன், கலிபோர்னியா நகரங்களில் கடுமையான உயிரிழப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க அமெரிக்கர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -