எப்.முபாரக் -
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினால் கந்தளாய் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கிழமைக்கு ஒரு தடவை உலருணவுப் பொருட்களை வழங்கி வருவதாக கந்தளாய் பிரதேச செயலாளர் என்.எம்.உபேக்சா குமாரி தெரிவித்தார்.
கந்தளாயில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பாக இன்று(18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
அரசினால் வழங்கப்பட்டுள்ள சஹன உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உலருணவுப் பொருட்களையும் வழங்கி வருவதோடு,இத் திட்டங்களுக்கு எமது உத்தியோகத்தர்கள் சிரமம் பாராது கடமையாற்றி வருகின்றார்கள்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
அரசினால் வழங்கப்பட்டுள்ள சஹன உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உலருணவுப் பொருட்களையும் வழங்கி வருவதோடு,இத் திட்டங்களுக்கு எமது உத்தியோகத்தர்கள் சிரமம் பாராது கடமையாற்றி வருகின்றார்கள்.
அதேபோன்று எமது பிரதேசத்தில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் மிகவும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு பல வழிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்,கிராம சேவர் அதிகாரிகள் ஊடாக உலருணவுப் பொருட்களையும் வழங்கி வருகின்றோம்.
பிரதேசத்தில் வருமானம் உடைய, அதேபோன்று நெல் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் போன்றவர்களின் உதவிகளையும் பெற்று செயற்பட்டு வருகின்றோம்.அதேபோன்று பிரதேசத்தில் உள்ள பௌத்த கோவில்,பள்ளிவாயல்,கோவில் போன்றவற்றுக்கும் உலருணவுப்பொருட்களை வழங்க உத்தேசித்துள்ளோம் என்றார்.
