நிரந்திர சம்பளத்தை பெறாத ஊடகவியலாளருக்கு 5000 ரூபா கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை .


பாறுக் ஷிஹான்-

டகவியலாளர் தகைமையை நிருபிக்கும் பட்சத்தில் 5000 ரூபா கொடுப்பனவு நிபந்தனையுடன்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  அம்பாறை மாவட்ட    சமூர்த்தி  பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு  எவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என  செய்தியாளர் சந்திப்பு  சனிக்கிழமை(18) மாலை  இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

  நிரந்திர சம்பளத்தை பெறாத பகுதி நேர ஊடகவியலாளர்கள் தமது ஊடக நிறுவனத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும்.எமக்கு ஊடக அமைச்சின் ஊடாக  பெயர் பட்டியல் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் பெயர் இல்லாதவர்கள் கூட தத்தமது ஊடக தகைமையை  உறுதிப்படுத்தி  குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும்.தற்போது இப்பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.எனவே ஊடகவியலாளர் தகைமையை நிருபிக்கும் பட்சத்தில் 5000 ரூபா கொடுப்பனவு நிபந்தனையுடன்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -