இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மீது கடுமையாக வரிவிதிப்பேன்- ட்ரம்ப்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

கொ
ரோனா வைரஸால் உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் மசகு எண்ணெய்யின் தேவையை காட்டிலும், உற்பத்தி மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மசகு எண்ணெய்யின் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இதனை சரி செய்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந் நிலையில் மசகு எண்ணெய் விலையில் இதே போன்ற நிலை நீடித்தால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய் மீது கடுமையாக வரிவிதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மசகு எண்ணெய் விலை இப்படியே இருந்தால் கடுமையாக வரிவிதிப்பதை அமுல்படுத்துவேன். ஏனென்றால் மசகு எண்ணெய் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் நாங்கள் சுதந்திரமாக உள்ளோம். எங்களிடம் எங்கள் சொந்த மசகு எண்ணெய் இருக்கிறது. நான் கடுமையாக வரிவிதிப்பதை அமுல்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளின் எண்ணெயை நாங்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்த முடியும்.
அமெரிக்காவின் எரிசக்தி துறையை பாதுகாப்பதற்கு இந்த வரிவிதிப்பு நடவடிக்கை அத்தியாவசியமாகிறது என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -