அமெரிக்காவுடனான சமாதான ஒப்பந்தம் விரைவில் முறியும் என தலீபான் எச்சரிக்கை!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

ப்கானிஸ்தானில் 19 வருடமாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தலீபான் அமைப்புடன் அமெரிக்கா பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் பலனாக கடந்த February மாத இறுதியில் இருதரப்புக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும், தலீபான் அமைப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் இந்த சமாதான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இவ் ஒப்பந்தத்தில் உறுதியளித்தபடி சிறையிலுள்ள ஐந்தாயிரம் தலீபான் கைதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை என தலீபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஒப்பந்தத்தை மீறி தங்கள் அமைப்பு மீது அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதாகவும், இது நம்பிக்கை துரோகம் என தெரிவித்துள்ளனர்.

அத்தோடு அமெரிக்கா தொடர்ந்து இதே போக்கை கையாண்டால் அமெரிக்கா அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட சமாதான ஒப்பந்தம் விரைவில் முறிவதை தவிர வேறு வழியில்லை என்றும் தலீபான்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -