திருகோணமலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக வீடுகளில் இருப்பவர்களுக்கு குறைந்த விலையில் மரக்கறி வகைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை,அன்புவழிபுரம், அபய புரம்,உவர்மலை, பட்டினத்தெரு ,பெரியகடை,மற்றும்பவர்ஹவுஸ் போன்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு தற்போது நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலை காரணமாக அம் மக்களுக்கு குறைந்த விலைகளில் மரக்கறிகளை வினியோகம் செய்வதற்காக நகரசபை மற்றும் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் மற்றும் சிவில் அமைப்புகள் மற்றும் சமூக நலன் விரும்பிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இவ் மரக்கறிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டமானது தற்போது நாட்டில் உள்ள அசாதரண நிலை முடியும் வரைத் தொடர்ச்சியான முறையில் நடைபெறும் எனவும் நகர சபையினர் தெரிவிப்பதோடு, இத்திட்டம் தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் சன நெருசலைத் தடுப்பதே பிரதான நோக்காகும் எனவும் நகர சபையினர் தெரிவிக்கின்றனர்.


