இலங்கை முஸ்லிம்களோ அரசிடம் மதிப்பில்லாத முஸ்லிம் கட்சிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு எதுவும் முடியாமல் தவிக்கிறது. அரசுடன் இருக்கும் முஸ்லிம் கட்சிகளை ஒதுக்கி விட்டு உங்களால் முடிந்தால் அரசாங்கத்தின் மூலம் சாதியுங்கள் பார்ப்போம் என சொல்கிறது.
அரசோ உங்களுக்கான மக்களின் செல்வாக்கை நிரூபியுங்கள் வேண்டியதை தருகிறோம் என்கிறது.
மக்கள் ஆதரவு இல்லாத கட்சி எவ்வளவுதான் அரச ஆதரவு கட்சியாக இருந்தாலும் பெரிதாக எதனையும் பெற முடியாது. அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கு ஏதும் கேட்டால் கிடைக்குமே தவிர மக்கள் அதிகாரம் இன்றி மக்களுக்கு எதனையும் பெற முடியாது. வேண்டுமாயின் சில கொந்தராத்துக்களையும் சில தனி நபர் தொழில் வாய்ப்பையும் பெறலாம்.
முஸ்லிம் சமூகம் இந்த யதார்த்த அரசியலை புரிய வேண்டும்.
மறைந்த தலைவர் முஸ்லிம் ஐக்கிய முன்னணியை ஆரம்பித்து அரசுக்கு ஆதரவாக செயற்பட்ட போதும் அவரால் எதையும் பெற முடியவில்லை. பின்னர் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு மக்கள் ஓட்டு கிடைத்த பின்பே அரசு அவரை திரும்பி பார்த்தது.
இப்போது இந்த அரசாங்கத்தின் ஆதரவு கட்சியாக இருப்பது மூன்று முஸ்லிம் கட்சிகள் மட்டும்தான்.
தேசிய காங்கிரஸ்
உலமா கட்சி
ஹசனலியின் கட்சி.
இந்த மூன்று கட்சிகளில் அதாவுள்ளாவின் கட்சிக்கு மட்டுமே சிறிதளவு முஸ்லிம்களின் ஓட்டு உள்ளது. அதற்கு அடுத்ததாக ஹசனலியின் கட்சி. அதற்கும் அடுத்ததாக உலமா கட்சி.
ஆனாலும் உலமா கட்சி மட்டுமே முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக தினமும் குரல் எழுப்பி வருகிறது.
இக்கட்சிகளை முஸ்லிம்கள் பலப்படுத்துவதன் மூலமே அரசாங்கத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு சாதகங்களை பெற முடியும். இல்லாவிடில் இரண்டு கெட்டான் நிலையில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் இன்னல்களை அனுபவிக்கத்தான் வேண்டி வரும்.
