நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளின் மற்றும் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு கருதி கிருமி நீக்கி இன்றும் (4) மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் பணிப்புரைக்கமைய சிறைச்சாலையின் உள்பகுதிகளான கைதிகளின் அறைகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கிருமி நீக்கி தெளிக்கப்பட்டது.
அதேபோன்று உத்தியோகத்தர்கள் கடமை பார்க்கும் இடங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற பகுதிகளும் கிருமி நீக்கி தெளிக்கப்பட்டது.
சிறைச்சாலையை அண்டிய பகுதிகளில் அடிக்கடி திருகோணமலை பொதுச் சுகாதார பகுதியினராலும் கிருமி தொற்று தெளிப்பதும் குறிப்பிடத்தக்கது.