ஊரடங்குச்சட்டம் அமுல் இருந்த காலப்பகுதியில் குறித்த இருவரும் மருதானை டார்லி வீதியில் நால்வருக்கு அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் தண்டணை வழங்கி எச்சரித்தமை தொடர்பான காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் நேற்று (12) ஒளிபரப்பானது.
கொழும்பு நகரத்திற்கு உட்பட்டு சேவையாற்றிய இரண்டு போக்குவரத்து பொலிஸாரே பணி இடைநீக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கட்டளையை மீறியமை, அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்துக்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கண்டுபிடிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
அன்று முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமையவே 24 மணித்தியால விசேட நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.