இவர்களது இந்த முழுமையான ஒத்துழைப்பு அரசாங்க நிருவாக பொறிமுறை சிறப்பாக செயல்பட்டுவதற்கு பெரும் உதவியாக அமைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ தெரிவித்தார்.
பொது மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையை எந்தவித பிரச்சினையுமின்றி முன்னெடுப்பதற்காக அரசாங்க அதிகாரிகள் அரப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.ஏபரல் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையில் அரசாங்கம் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான வாரத்தை அறிவிததுள்ளது. இருப்பினும் அரச ஊழியர்கள் தொடர்சிசயாக பணியாற்றி வருகின்றனர் என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
அரசாங்க ஊழியர்களுக்கம் நாட்டு மக்களுக்கும் இது புது அனுபவம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தொடக்கம் ஊழியர்கள் வரையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மக்களுக்கான தமது சேவைகளை கிராம மட்டத்தில் மக்களின்காலடிக்கே முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ மேலும் தெரிவித்தார்.
