ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கடந்த 15ஆம் திகதி குணசிங்கபுரத்தில் கழிவறைகள் துப்பரவு செய்யும் நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது அறியவந்ததைத் தொடர்ந்து அன்றைய தினம் குணசிங்கபுர டயஸ் பிளேசில் இருந்து முகாந்திரம் வீதி மற்றும் குணசிங்கபுர நாற்சந்தி வரை பாதைகள் முடக்கப்பட்டு பொலிஸாரால் எவரும் அப்பகுதிக்குள் செல்வது தடை செய்யப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன் குறித்த நபரும் வீதியோரங்களில் தங்குபவராக இருந்ததால் இன்னும் பலருக்கு இருக்கலாம் என சந்தேகித்து சுமார் 350க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் வீதியோரங்களில் தங்குபவர்களை நேற்று பொலிஸார் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைத்த நிலையில் இன்று நான்காவது நாள் மதியம் பொலிஸாரால் போடப்பட்ட தடைகள் அகற்றப்பட்டதுடன் வழமையான போக்குவரத்து தடைகள் மாத்திரமே காணப்படுகின்றன.